தமிழகத்தில் இன்று காலை 7மணிமுதல் பலத்த பாதுகாப்போடு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

by Editor / 19-02-2022 12:12:47am
தமிழகத்தில் இன்று காலை 7மணிமுதல் பலத்த பாதுகாப்போடு வாக்குப்பதிவு தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12,838.வார்டுகள் உள்ளன.இந்த வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு  74,416 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்து 62 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 14 ஆயிரத்து 324  தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். மேலும் பல்வேறு ஊர்களில் உறவுகளினால் விட்டுக்கொடுக்கபட்டு 218 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகினர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மரணம் அடைந்துள்ளனர். இதனால் அந்த வார்டுகளில் மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் சுமார் 58 ஆயிரம்  வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் கடந்த 17ஆம் தேதி வியாழக்கிழமை மாலை6மணியோடு நிறைவடைந்த நிலையில் 18ஆம் தேதி  முழுவதும் வேட்பாளர்கள் பரப்பாக வாக்குச்சாவடி முகவர்கள் விபரங்களை பெறுவதில் கவனம் செலுத்தினர்.இந்த நிலையில் தமிழகத்தில்  சுமார் 1இலட்சம் போலீசார்,ராணுவத்தினர் உள்ளிட்டோரின் பாதுகாப்போடு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்குகிறது.கண்காணிப்பு கேமராக்கள்,துப்பாக்கி ஏந்திய காவலர்கள்,என 10ஆண்டுகளுக்குப்பின்னர் தேர்தல் நடைபெறுவதால்  நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் களைக்கட்டத்தொடங்கியுள்ளது. 


 

தமிழகத்தில் இன்று காலை 7மணிமுதல் பலத்த பாதுகாப்போடு வாக்குப்பதிவு தொடங்குகிறது.
 

Tags : Voting in Tamil Nadu begins at 7 am today with heavy security.

Share via