உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்த அனைத்து வகையிலும் முயற்சி

by Staff / 06-05-2022 12:40:12pm
உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்த அனைத்து வகையிலும் முயற்சி

உக்ரைன் ரஷ்யா இடையிலான போருக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அதிபர் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர் உக்ரேன் மீது ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகள் எவ்வளவு நாள் நீடிக்கும் எனத் தான் நினைக்கவில்லை என்றும் இந்த போரை பெலாரஸ்  ஏற்கவில்லை என்றும் கூறினார். இதையடுத்து இம்மாத தொடக்கத்தில் ரஷ்ய படைகளுடன் இணைந்து ராணுவ பயிற்சி மேற்கொண்டது இது குறித்து பேசிய அவர் யாரையும் அச்சுறுத்துவாதற்காக ராணுவப் பயிற்சி மேற்கொள்ளவில்லை எனவும் மோதலை உருவாக்கி மேற்கத்திய நாடுகளில் போரை உருவாக்குவது பெலாரஸ்  திட்டம் இல்லை என்றும் தெரிவித்தார்.

 

Tags :

Share via