டெல்லி துணை நிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனா நியமனம்

by Editor / 23-05-2022 09:53:28pm
டெல்லி துணை நிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனா நியமனம்

டெல்லி: டெல்லி துணை நிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனாவை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெல்லி துணை நிலை ஆளுநராக இருந்த அனில் பைஜால்  ராஜினாமா செய்தார்.இந்நிலையில் வினய்குமார் சக்சேனாவை டெல்லி யின் புதிய துணை நிலை ஆளுநராக நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.வினய்குமார் சக்சேனா காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Vinay Kumar Saxena appointed Deputy Governor of Delhi

Share via