ரூ.400 கோடி மதிப்பில் மெகா காலணி உற்பத்தி பூங்கா : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

by Editor / 30-06-2022 01:55:29pm
ரூ.400 கோடி மதிப்பில் மெகா காலணி உற்பத்தி பூங்கா :  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   திறந்து வைத்தார்

 
திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று ராணிப்பேட்டை பாரதி நகரில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து 267 கோடி ரூபாயில், 71 ஆயிரத்து 103 பயனாளிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் பங்கேற்றார். அப்போது 5 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், 32 கோடி ரூபாய் மதிப்பிலான, 23 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர்,  ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 361 கோடி ரூபாயில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், 24 ஆயிரம் பேருக்கு கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதென்றும் தெரிவித்தார்.நரிக்குறவர் வீட்டிற்கு சென்று விளம்பரம் தேடிக்கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியதை குறிப்பிட்ட முதலமைச்சர், 50 ஆண்டுகளுக்கு மேல் அரசியலில் இருக்கும் தனக்கு, இனி மேல் எதற்கு விளம்பரம் என்றும், நரிக்குறவர், இருளர் இனத்தவர் வீடுகளுக்கு சென்றதன் மூலம் இது மக்களின் அரசு என்பது வெளிப்பட்டுள்ளதாகவும் கூறினார். ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் 400 கோடி ரூபாய் மதிப்பில் மெகா காலணி உற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

ரூ.400 கோடி மதிப்பில் மெகா காலணி உற்பத்தி பூங்கா :  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   திறந்து வைத்தார்
 

Tags :

Share via