நமது அம்மா வெளியீட்டாளர் வீட்டில் வருமான வரி சோதனை

by Admin / 06-07-2022 01:58:51pm
நமது அம்மா வெளியீட்டாளர் வீட்டில் வருமான வரி சோதனை


முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின்  நெருங்கிய நண்பரும்  நமது அம்மா இதழின் வெளியீட்டாளருமான சந்திர சேகரன் வீடு உள்ளிட்ட ஆறு இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் .முன்னாள் அமைச்சரின் வீடு, அலுவலகம்,நகை கடை உள்ளிட்டஇடஙகளில்  வருமானத்திற்கு  அதிகமாக  சொத்து சேர்த்த  வகையில்  அண்மையில் வருமான வரிசோதனை நடந்த  பொழுது  நண்பர் என்ற   அடிப்படையில்   சந்திரசேகர் வீடு,கடைகளிலும் வருமான வரி சோதனை நடந்தது இந்நிலையில்,இப்பொழுதுமீண்டும் சோதனை நடந்து வருகிறது. சந்திரசேகரின் மனைவி உள்ளாட்சித்தேர்தலின் பொழுது கோவை மேயர் வேட்பாளராக அ.தி.மு.க  சார்பில் போட்டி இட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via