18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதும் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று..?

by Editor / 11-07-2022 08:51:52am
18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதும் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இன்று..?

நடப்பு கல்வியாண்டுக்கான மருத்துவம் சார்ந்த படிப்பு எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெற்று வருகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நீட் தேர்வு வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு 10,64,606 பெண்கள், 807,711 ஆண்கள், 12 திருநங்கைகள் என மொத்தம் 18 லட்சத்து 72 ஆயிரத்து 339 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 1 லட்சத்து 42 ஆயிரத்து 286 பேர் எழுதுகிறார்கள். இந்நிலையில் https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தில் இன்று ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், அதனைத்தொடர்ந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

 

Tags : More than 18 lakh people write the NEET exam hall ticket today..?

Share via