என்.ஐ.ஏ சோதனையில், 57 செல்போன்கள், 68 சிம் கார்டுகள் 2 லேப்டாப் பறிமுதல்.

by Editor / 20-07-2022 10:15:14pm
என்.ஐ.ஏ சோதனையில், 57 செல்போன்கள், 68 சிம் கார்டுகள் 2 லேப்டாப்  பறிமுதல்.

கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்பகுதியில் கடந்தாண்டு கடத்திவரப்பட்ட 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், ஆயிரம் தோட்டாக்களை கடலோர பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தல் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த ஆண்டு மே மாதம் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய  மேலும் இருவர் கைதாகினர்.

இதனைத் தொடர்ந்து, சென்னை உட்பட பல மாவட்டங்களில்  தேசிய புலனாய்வு முகமை நடத்திய சோதனையில், சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த சபேசன் என்ற இலங்கைத் தமிழர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விடுதலை புலிகள் இயக்கம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், சென்னையில் மண்ணடி, சேலையூர், கிழக்கு கடற்கரை சாலை  நடைபெற்ற என்ஐஏ சோதனையில், 57 செல்போன்கள், 68 சிம் கார்டுகள் 2 லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல்.

சென்னையில் 9 இடங்களிலும், சோதனை மேற்கொண்டனர். இதேபோல், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் உட்பட 11 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


 

 

Tags : NIA seized 57 cell phones, 68 SIM cards and 2 laptops during the raid.

Share via