2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டம் இன்று ஆர்டெமிஸ் -1 ராக்கெட்- நாசா விண்ணில் ஏவுகிறது

by Editor / 03-09-2022 10:45:50am
 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டம் இன்று  ஆர்டெமிஸ் -1 ராக்கெட்- நாசா விண்ணில் ஏவுகிறது

நாசா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக அனுப்ப உள்ளது. ஆர்ட்டெமிஸ்-1, 42 நாட்களில் சுமார் 1.3 மில்லியன் மைல்கள் பயணிக்கும். நிலவின் மேற்பரப்பில் இருந்து 60 மைல்களுக்கு அருகில் ஓரியன் விண்கலத்தை பறக்க நாசா திட்டமிட்டுள்ளது. கடந்த 29ம் தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பும் பணி தொடங்க திட்டமிடப்பட்டது. கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இந்த விண்கலம் புறப்படுவதற்கான கவுன்ட் டவுன் தொடங்கப்பட்டது. ஆனால், சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதன் காரணமாக 40 வது நிமிடத்தின் போது கவுன்ட் டவுன் நிறுத்தப்பட்டது. பின் ஆர்ட்டெமிஸ்-1 திட்ட ஹைட்ரஜன் குழு, ராக்கெட் ஏவுதல் இயக்குனருடன் அடுத்தகட்ட நடவடிக்கைளை பற்றி விவாதித்தனர். இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில் ஆர்டெமிஸ் 1 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது.

 

Tags :

Share via