தங்கம் விலை தொடர் சரிவு!! இன்று சவரனுக்கு ரூ.168 குறைவு

by Staff / 15-09-2022 10:58:11am
தங்கம் விலை தொடர் சரிவு!! இன்று சவரனுக்கு ரூ.168 குறைவு

தங்கம் விலை இன்றும் சரிந்துள்ளதால், நகை பிரியர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.37,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.21 குறைந்துள்ளது. இதனையடுத்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து ரூ.61.10-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via