இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் குடும்ப அரசியல் உள்ளது-ஜே.பி.நட்டா

by Editor / 22-09-2022 10:16:57pm
இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் குடும்ப அரசியல் உள்ளது-ஜே.பி.நட்டா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா கலந்துகொண்டு பேசியதாவது:

வரும் காலத்தில் தமிழ்நாட்டில் தாமரை ஆட்சி மலரும். தமிழகத்தின் கலாசாரம் புனிதமானது. இது அறிவு ஜீவிகளின் மண், இந்த மண்ணிற்கு தலை வணங்குகிறேன்.மோடி சிறப்பாக கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதால், இங்கு நாம் யாரும் முகக் கவசம் அணியாமல் தைரியமாக அமர்ந்திருக்கோம்.

இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறவில்லை, சமூகம் சார்ந்தும் முன்னேறியுள்ளது. தற்போது நரிக்குறவர் மக்களுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா ஆயுத ஏற்றுமதியில் முன்னேறியுள்ளது. 
விவசாயத் துறை பட்ஜெட்டில் 2014ல் ரூ.27 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது 1 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக உள்ளது. உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த நிலையிலும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி கோடி கோடியாக கொட்டி கொடுக்கிறார்.
பிரதமர் நரோந்திர மோடி சென்னை, மதுரை, கன்னியாகுமரி என 5 இடங்களில் ரயில்வே ஸ்டேஷன்களை புதிப்பித்துள்ளார்.

மருது சகோதர்கள், வேலு நாச்சியார், பூலித்தேவன் உள்ளிட்டோரின் தியாகத்தையும் வீரத்தையும் இந்த மண்ணில் நின்று நினைவுகூறுகிறேன்..

தமிழையும் அதன் பெருமையையும் ஐ.நா வரை கொண்டுச் சேர்த்தவர் பிரதமர் நரேந்திரமோடி.

இங்கு கூடியிருக்கும் கூட்டத்தால் நான் கவுரவிக்கப்படுகிறேன், இது தமிழகத்தில் பாஜகவுக்கு எதிர்காலம் உள்ளது என்ற நம்பிக்கையை அளிக்கிறது. தமிழகத்தில் விரைவில் தாமரை மலரப்போகிறது.

நரிக்குறவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சியாக மோடி ஆட்சி இருப்பதால் தான், அவர்களை ST பிரிவில் சேர்த்துள்ளோம். அதேபோல 7 வெவ்வேறு சமூதாயங்களை இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்றும் பெயரிட்டு, அவர்களுக்கும் நாம் பெருமை சேர்த்துள்ளோம்

பாஜக தான் தேசிய கட்சியாக  உள்ளது. மற்ற கட்சிகள் சுருங்கிவிட்டது. இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் குடும்ப அரசியல் உள்ளது. தமிழகத்தில் கருணாநிதி, ஸ்டாலின், என வரிசைகட்டி வருகின்றனர் என்றார். ஜே.பி.நட்டா

 

Tags :

Share via