காங்கிரஸ் தலைவர் பதவி.. பரபரப்பு தகவல்
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக முடிவு செய்துள்ளேன் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், விரைவில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளேன்; எதிர்க்கட்சி வலுவாக இருக்க வேண்டும் என்பதே எனது நிலைபாடு. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிடவில்லை" என்றும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. 22 ஆண்டுகளுக்கு பிறகு தலைவர் பதவிக்கு முதன்முறையாக தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Tags :