கோவையில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் கோராக்பூருக்கு சிறப்பு ரயில்கள்

by Staff / 05-10-2022 05:14:12pm
 கோவையில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் கோராக்பூருக்கு சிறப்பு ரயில்கள்

பண்டிகை கால கூட்டம் கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கோவையில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் கோராக்பூருக்கு, வரும், 11 முதல் நவ. , 8ம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.கோவையில் இருந்து(வண்டி எண்: 05304) வாரந்தோறும் செவ்வாய் காலை, 4: 40 மணிக்கு புறப்படும் ரயிலானது வியாழன் காலை, 8: 35க்கு கோராக்பூர் சென்றடையும். திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, பெரம்பூர், நெல்லுார், ஓங்கல், விஜயவாடா, நாக்பூர் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் இந்த ரயில் நின்று செல்கிறது.கோராக்பூரில் இருந்து வண்டி எண் (05303) வாரந்தோறும் சனிக்கிழமை காலை, 8: 30க்கு புறப்படும் சிறப்பு ரயில், திங்கள் காலை, 7: 25க்கு கோவை வந்தடையும் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது

 

Tags :

Share via