அக்டோபர் 10 முதல் திங்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராமேஸ்வரம் - மதுரை சிறப்பு கட்டண ரயில்

by Editor / 07-10-2022 10:37:18pm
அக்டோபர் 10 முதல் திங்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராமேஸ்வரம் - மதுரை சிறப்பு கட்டண ரயில்

ராமேஸ்வரம் - மதுரை இடையே கூடுதலாக ஒரு வாரம் மும்முறை சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் சேவை அக்டோபர் 10 முதல் துவங்கி மறு அறிவிப்பு வரும் வரை திங்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். அதன்படி ராமேஸ்வரம் - மதுரை வாரம் மும்முறை சிறப்பு கட்டண ரயில் (06780) ராமேஸ்வரத்திலிருந்து காலை 06.20 மணிக்கு புறப்பட்டு காலை 10.00 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.  இந்த ரயிலில் 9 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்படும்.

 

Tags :

Share via