நடிகர்கள் பெயரில் ரூ.5 லட்சம் வரை கழுதைகள் விற்பனை

by Staff / 27-10-2022 02:58:06pm
 நடிகர்கள் பெயரில் ரூ.5 லட்சம் வரை கழுதைகள் விற்பனை

உத்தரபிரதேச மாநிலம் சித்ரகுட் மாவட்டம் மந்தாகினி நதிக்கரையில் புந்தேல்கணிட் பகுதி உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு மறுநாளில் இருந்து 3 நாட்களுக்கு கழுதை சந்தை நடைபெறும். கடந்த 3 நாட்களாக இங்கு கழுதை சந்தை நடைபெற்றது. இங்கு வியாபாரிகள் பலர் தங்கள் கழுதைகளுக்கு இந்தி நடிகர்களின் பெயர்களை வைத்திருந்தனர்.

அதிகளவில் பொதி சுமக்கும் கழுதைகளுக்கு ரன்பீர்கபூர், ஹிருத்திக் ரோஷன் என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது. இந்த கழுதைகள் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை விற்கப்பட்டன. நேபாளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கழுதைகள் அதிகபட்சமாக ரூ.5 லட்சத்துக்கு விற்பனையானது. இந்த கழுதை சந்தையில் ரூ.2 கோடி வரை விற்பனையாகி உள்ளது.

 

Tags :

Share via