ரூ. 3,700 கோடி சொத்துக்கள் மீட்பு - அமைச்சர் தகவல்

by Staff / 11-11-2022 03:32:47pm
ரூ. 3,700 கோடி சொத்துக்கள் மீட்பு - அமைச்சர் தகவல்

நெல்லையப்பர் கோவிலில் ரூ. 4.03 கோடி மதிப்பிலான திருப்பணிகள் தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு,தமிழகம் முழுவதும் இதுவரை அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.3,700 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. நெல்லையப்பர் கோவிலில் அம்பாள் சன்னதி மேற்கு பிரகாரம், கரு உருமாரி தெப்பம் மற்றும் அம்பாள் சன்னதி மேல் கூரை ஓடு அமைக்கும் பணிகளுக்கு முதலமைச்சர் தலைமையில் அனுமதி வழங்கப்பட்டு டி.வி.எஸ். நிறுவனத்தின் உபயத்தில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் ஒரு ஆண்டுக்குள் நிறைவு பெறும்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் நூறாண்டுகள் பழமை வாய்ந்த 100 சிறிய கோவில்களை சீரமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகரப் பகுதிகளில் உள்ள 200 கோவில்களை புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு இல்லாத வகையில் கோவில்கள் குடமுழுக்கு, திருப்பணிகள் மற்றும் ஓடாத தேர்களை ஓட வைப்பதற்கான தேர் திருப்பணிகள் ஆகியவை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. என்றார்.

 

Tags :

Share via