கனமழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை.

by Editor / 14-11-2022 08:09:02pm
கனமழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க தடை.

தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று மாலை திடீரென கன மழை பெய்தது இம்மழையின் காரணமாக தென்காசி மாவட்டத்தினுடைய பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது இதன் தொடர்ச்சியாக அருவிகளின் நகரம் என போற்றப்படும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான தென்காசி பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் மெயின் அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டத் தொடங்கியது.இதன் தொடர்ச்சியாக குற்றாலம் மெயினருவி,ஐந்தருவி,பழையகுற்றாலம் அருவி உள்ளிட்ட அருவிகளில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை செய்தது 

 

Tags :

Share via

More stories

Logo