எமெர்ஜென்சி காலம் இந்திய வரலாற்றின்  இருண்ட அத்தியாயம்’ பிரதமர்

by Editor / 30-06-2021 05:30:31pm
எமெர்ஜென்சி காலம் இந்திய வரலாற்றின்  இருண்ட அத்தியாயம்’ பிரதமர்



1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி அவசரநிலை அறிவிக்கப்பட்டதன் 46ஆவது ஆண்டு நினைவு தினத்தில் பாஜக தலைவர்கள் அக்காலகட்டத்தை நினைவுகூர்ந்துள்ளனர்.
1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி தொடங்கி 1977ஆம் ஆண்டு வரை 21 மாத காலத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அவசரநிலை நாடு முழுவதும் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், அவசரநிலை அறிவிக்கப்பட்டதன் 46ஆவது ஆண்டு நினைவு தினமான , வரலாற்றின் இருண்ட நாள்களான அவசரநிலை காலத்தை ஒருபோதும் மறக்க முடியாது என்றும், இந்த நாளில் இந்தியாவின் ஜனநாயக உணர்வை வலுப்படுத்தவும், அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதிப்புகளுக்கு ஏற்ப வாழவும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அப்போதைய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட பல கடுமையான நடவடிக்கைகள் குறித்து ஒரு இணைப்பைப் பகிர்ந்து ட்வீட் செய்துள்ள மோடி, "நமது ஜனநாயக நெறிமுறைகளை காங்கிரஸ் இவ்வாறுதான் மிதித்தது. எமர்ஜென்சியை எதிர்த்து இந்திய ஜனநாயகத்தை பாதுகாத்த அனைத்து தலைவர்களையும் இப்போது நினைவு கூறுகிறோம்
."அவசர காலத்தின் இருண்ட நாள்களை ஒருபோதும் மறக்க முடியாது. 1975ஆம் ஆண்டு முதல் 1977ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் மொத்த கட்டமைப்புமே முறையாக அழிக்கப்பட்டது. இன்றைய நாளில் இந்தியாவின் ஜனநாயக உணர்வை வலுப்படுத்த நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதிப்புகளுக்கு ஏற்ப வாழ்வோம் என்று உறுதியேற்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
தவிர, அவசர நிலை பிரகடனப்படுத்த நாளை பாஜகவின் பிற தலைவர்கள் பலரும் இன்று நினைவுகூர்ந்து கடுமையாக காங்கிரஸை சாடியுள்ளனர்
இது குறித்துப் பேசியுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 1975ஆம் ஆண்டில் பதவி மோகம், அதிகார வெறி உள்ளிட்ட காரணங்களால் காங்கிரஸ் ஜனநாயகப் படுகொலை செய்தது. ஒரு குடும்பத்திற்கு எதிராக எழுப்பப்பட்ட குரல்களை மிதிக்க அவசரநிலை விதிக்கப்பட்டது. இது இந்திய ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம்” எனத் தெரிவித்துள்ளார்.பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, அடக்குமுறைகளுக்கு எதிராக எமர்ஜென்சி காலத்தில் போராடியவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

 

Tags :

Share via