சிறுமியின் உயிரைக் காப்பாற்றியவிஜயகுமாருக்கு எம். எல். ஏ.பாராட்டு

by Editor / 31-12-2022 09:39:27am
சிறுமியின் உயிரைக் காப்பாற்றியவிஜயகுமாருக்கு  எம். எல். ஏ.பாராட்டு

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் நேற்று குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியை தன் உயிரை பணயம் வைத்து உடனடியாக சென்று சிறுமியை காப்பாற்றிய விளாத்திகுளத்தைச் சேர்ந்த டாக்ஸி டிரைவர் விஜயகுமாருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் குவிந்து வந்தவண்ணம் இருந்தன. இந்நிலையில் தற்போது விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ மார்கண்டேயன் சிறுமியை காப்பாற்றிய விஜயகுமாருக்கு பொன்னாடை போர்த்தி, "மனசுதான்பா வேணும் எந்த உதவி வேனாலும் ஒரு ஆளு செய்யலாம்" என்று பாராட்டினார்.மேலும், இவரின் வீர தீர செயலை பாராட்டி விருதுக்கு பரிந்துரை செய்வதாகவும் கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo