விக்கிபீடியாவை நம்ப முடியாது உச்சநீதிமன்றம்

by Staff / 19-01-2023 12:41:20pm
விக்கிபீடியாவை நம்ப முடியாது உச்சநீதிமன்றம்

’விக்கிபீடியா’ போன்ற இணையவழி தரவு தளங்களில் வெளியிடப்படும் ஆதாரங்களை நீதிமன்ற வழக்குகளில் முழுமையாக நம்பமுடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சட்ட வழக்கு விவகாரங்களில் விக்கிபீடியா போன்ற இணைய வழி தரவு தளங்களில் இருந்து பெறப்படும் தரவுகளை ஆதாரங்களாக ஏற்க முடியாது. இதனை அனுமதிப்பது தவறான தகவல்களை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும். எனவே நீதிமன்றங்கள் நம்பகமான ஆதாரங்களை சமர்பிக்குமாறு வழக்கறிஞர்களை வற்புறுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

 

Tags :

Share via