சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன உத்சவம் கொடியேற்றம்

by Editor / 24-07-2021 08:28:24pm
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன உத்சவம் கொடியேற்றம்

 

 சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா இன்று காலை 7.45 மணி அளவில் நடராஜர் முன்பு உள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் கனகசபேச தீட்சிதர் கொடியேற்றினார். நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்க சப் கலெக்டர் மதுபாலன் தடை விதித்ததை முன்னிட்டு காலை 9 மணி வரை பொதுமக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.


கோயில் முன்பு சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், குணபாலன், விஜி தேவி மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ் முருகன், நாகராஜன் உட்பட 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
உத்சவ விபரம் வருமாறு: ஜூலை 7- ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதிஉலா, 8 -ம் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 9 -ம் தேதி வெள்ளி பூத வாகன வீதி உலா, 10 -ம் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 11 -ம் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 12 -ம் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா, 13 -ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெறுகிறது.


ஜூலை 14- ம் தேதி புதன்கிழமை தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூலை 15 -ம் தேதி வியாழக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.


பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. ஜூலை.16 -ம் தேதி வெள்ளிக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. 

 

Tags :

Share via