ரூ.1,000 உரிமைத்தொகை அறிவிப்பு விரைவில்

by Staff / 17-03-2023 01:18:34pm
ரூ.1,000 உரிமைத்தொகை அறிவிப்பு விரைவில்

சட்டமன்ற கூட்டத்தொடர் பட்ஜெட்டில் பெண்களுக்கான மாதம் தோறும் உரிமைத்தொகை ரூ.1,000 அறிவிப்பு வெளியாகும், இந்த தித்திப்பான செய்தியை அறிவிக்க முதல்வர் ஆவலோடு உள்ளார் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுகூட்டத்தில் பேசிய அவர், 2.5 கோடி பெண்கள் அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செய்து பயனடைகின்றனர். இது உலக அதிசயங்களில் ஒன்றாகும். வேறு எந்த நாட்டிலும் இந்த திட்டம் கிடையாது. வரும் 20ஆம் தேதி தித்திப்பான செய்தி வெளியாகும் என்றார்.

 

Tags :

Share via