கர்நாடக சட்டமன்றத் தேர்தல்- காங்கிரஸ் கட்சி முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது

by Writer / 25-03-2023 11:14:08am
கர்நாடக சட்டமன்றத் தேர்தல்- காங்கிரஸ் கட்சி முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது

அடுத்த மே மாதம் மாதம் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்கிற நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது  இதற்கு முன்னதாக திங்கட்கிழமை அன்று 80 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆம் ஆத்மா கட்சி வெளியிட்டது  குறிப்பிடத்தக்கது  முதல் பட்டியலில்  முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா, மாநில கட்சித் தலைவர்  டி.கே.சிவக்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. முன்னாள் முதல்வரின் சொந்த தொகுதியான மைசூரில் உள்ள வருணா தொகுதியில் முன்னாள் முதல்வரும், கேபிசிசி தலைவர் டிகே சிவகுமாரை கனகபுரா தொகுதியிலும் நிறுத்த கட்சி முடிவு செய்துள்ளதுகர்நாடக சட்டமன்றத்திற்கு  வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களாக  பின்வரும்  நபர்களை  தேர்வு  செய்துள்ளது    காங்கிரஸ் தலைவர்களான   யெம்கன் மார்டியில்  இருந்து  சதீஷ் ஜார்கி ஹோலி, பெல்காம்  ரூரலில் இருந்து  லக்ஷ்மி ஹெப்பல்கர் , சிதாபூரிலிருந்து  பிரியங்க் கார்கே, சிவாஜி நகரில்  இருந்து ரிஸ்வான் அர்ஷத், காந்தி நகரில் தினேஷ்  குண்டு ராவ்,  நரசிம்ம ராஜாவிலிருந்து  தன் வீர் சைட், சாம்ராஜ் பேட்டை யில்   இருந்து  பி இசட்  ஜமீர்  அகமது கான் ஆகியோரின்  பெயர்கள்  பட்டியலில் இடம்பெற்றுள்ளன.  கொரடகெரேவைச் சேர்ந்த ஜி.பரமேஸ்வரா,  தேவனஹள்ளியில்  இருந்து  முன்னாள் அமைச்சர் கே.எச்.முனியப்பா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர் மார்ச் 17 அன்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகுகாங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையிலான கட்சியின் மத்திய தேர்தல் குழு, ராகுல் காந்தி போன்ற குறிப்பிடத்தக்க தலைவர்களுடன்124 வேட்பாளர்கள் அடங்கிய வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது

கர்நாடக சட்டமன்றத் தேர்தல்- காங்கிரஸ் கட்சி முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது
 

Tags :

Share via