இயக்குனராக களமிறங்கும் ஜெயம் ரவி

by Staff / 02-05-2023 05:49:16pm
இயக்குனராக களமிறங்கும் ஜெயம் ரவி

பொன்னியின் செல்வன் படம் குறித்து சமீபத்தில் பேசிய நடிகர் ஜெயம் ரவி 'இது போன்ற மல்டி ஸ்டார் படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை, ஆனால் அதை யார் இயக்க போகிறார்கள் என்பது முக்கியம். மணிரத்தினம் ஒருவரால் மட்டும்தான் அது சாத்தியம்' என்று கூறினார். மேலும் அவர் இயக்குனர் மணிரத்தினம் அவர்களிடம் தான் எழுதிய கதை கூறி இருப்பதாகவும், தனது இயக்கத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடிப்பார் என்றும் கூறியுள்ளார். நடிகர் ஜெயம் ரவி இயக்குனராக கார்த்தி ஹீரோவாக நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via