உலகத் தலைவர்கள் முன்னிலையில் பிரிட்டனின் புதிய மன்னராக 3-ம் சார்லஸ்

by Staff / 10-05-2023 12:24:25pm
 உலகத் தலைவர்கள் முன்னிலையில் பிரிட்டனின் புதிய மன்னராக 3-ம் சார்லஸ் பிரிட்டன் அரசின் புதிய மன்னராக 3-ம் சார்ல்ஸ் முடிசூட்டிக்கொண்டார். 70 ஆண்டு காலமாக பிரிட்டனை ஆட்சி செய்து வந்த ராணி இரண்டாம் எலிசபெத் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி காலமானார். இதனால் அவரின் மகன் 3ஆம் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக அறிவிக்கப்பட்டார்.பிரிட்டன் மன்னராக அறிவிக்கப்பட்டபோதிலும் அவரின் முடிசூட்டு விழா இதுவரை நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில், லண்டனில் தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள west minster abbeyயில் 3ஆம் சார்ல்ஸ்சின் முடிசூட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் 74 வயதான 3ஆம் சார்லஸ்சுக்கு மன்னராக முடிசூட்டப்பட்டது. விழாவில் அவருடன் மனைவி கமிலா உடன் இருந்தார். இதற்காக லண்டன் நகரமே வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மனைவி ஜில் பைடன், கனடா பிரதமர் ட்ரூடோ, பிரான்ஸ், ஜெர்மனி நாட்டு தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 2,300 விருந்தினர்கள் விழாவில் பங்கேற்றனர்.
 

Tags :

Share via