கொளத்தூர் அண்ணா சாலை,பெரியார் நகர், ஜவகர் நகர், ஜி கே எம் காலனி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் அகற்றப்பட்டு உள்ளது..

by Admin / 30-11-2023 11:10:25am
 கொளத்தூர் அண்ணா சாலை,பெரியார் நகர், ஜவகர் நகர், ஜி கே எம் காலனி  உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் அகற்றப்பட்டு உள்ளது..

நேற்று தொடர்ச்சியாக பெய்து வந்த கனமழையின் காரணமாக, கொளத்தூர் பெரவள்ளூர் காவல் துணை ஆணையர் அலுவலகம் சாலையில் எப்பொழுதும் ஒரு வாரத்திற்கு மேலாக தண்ணீர் குளம் போல் தேங்கி நின்று வெளியேறாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும்நிலையில், நேற்று பெய்த மழையின் காரணமாக இரவில் தேங்கி நின்ற தண்ணீரை இரவில் மாநகராட்சி ஊழியர்கள் விடாமுயற்சியின் காரணமாக......

 பெரியார் நகர் ஜவகர் நகர், ஜி கே எம் காலனி, கொளத்தூர் அண்ணா சாலை பகுதி உள்ளிட்ட பகுதிகளில், இப்பொழுது தண்ணீர் வெகுவாக தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டு வழக்கமாக மக்கள் பயன்படுத்தும் சாலையாக இன்று மாறி உள்ளது. சென்னை கொளத்தூர் பகுதியில் பனிரெண்டு சென்டி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்ததனால் பல்வேறு இடங்களில் தேங்கி நின்ற தண்ணீரீரையும் மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக இயங்கி வெளியேற்றியுள்ளனர்.

 கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த வடிகால் பணிகள் நிறைவுற்றதால் தண்ணீர் வெகு சீக்கிரத்தில் வெளியேறி உள்ளது.. எப்பொழுதுமே அதிக மழை பொழிகின்ற பொழுது கொளத்தூர் பகுதி தண்ணீரில் தத்தளிக்கும். ஆனால் இம்முறைஅந்நிலை  தொடரவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.

 கொளத்தூர் அண்ணா சாலை,பெரியார் நகர், ஜவகர் நகர், ஜி கே எம் காலனி  உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் அகற்றப்பட்டு உள்ளது..
 
Tags :

Share via