12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

by Editor / 21-05-2023 07:50:50am
 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி, ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 48 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.மே 23ஆம் தேதி மற்றும் 24 ஆம் தேதியில் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

 

Tags :

Share via

More stories

Logo