காங்கிரஸ் கூட்டத்தில் அலப்பறை

by Staff / 15-08-2023 02:27:20pm
காங்கிரஸ் கூட்டத்தில் அலப்பறை

தெலங்கான மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த காங்கிரஸ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் இருவர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கான மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள அடிலாபாத்தில் காங்கிரஸ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது மாவட்ட தலைவர் சஜித் கான் மற்றொரு தலைவர் காந்தி ஸ்ரீனிவாஸ் ரெட்டி தலைமையிலான கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதால் கூட்டத்திற்கு வந்த தொண்டர்கள் தலை தெறித்து ஓடினர். இதனையடுத்து காந்தி ஸ்ரீனிவாஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via