திருமாவளவன் பிறந்தநாள் - ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து

by Staff / 17-08-2023 01:11:53pm
திருமாவளவன் பிறந்தநாள் - ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்த நாள் இன்று அக்கட்சியினரால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு ஓ. பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன்படி, அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், “ விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் அன்புத் தம்பி தொல். திருமாவளவன், M.P. திருமாவளவன் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர் தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ்ந்து தொடர்ந்து நாட்டுக்கு சேவைபுரிந்திட எல்லாம்வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via