முரசொலி மாறன் பிறந்தநாள் - கனிமொழி வாழ்த்து

by Staff / 17-08-2023 02:10:25pm
முரசொலி மாறன் பிறந்தநாள் - கனிமொழி வாழ்த்து

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் 90-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்திற்குத் தமிழக முதல்வர் மரியாதை செலுத்தினார். இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழி தனது ட்வீட்டர் பக்கத்தில், “தலைவர் கலைஞரின் மனசாட்சியாக விளங்கிய திரு. முரசொலி மாறன் அவர்களின் 90-வது பிறந்தநாள் இன்று. நம் கழகத்தின் முதன்மைக் கொள்கையான மாநில சுயாட்சிக்கென, எவரும் விளங்கிடும் வண்ணம் விளக்கம் தந்தவர். கூட்டாட்சித் தத்துவத்தையும், மாநில உரிமைகளையும் காக்க வேண்டிய இந்த நேரத்தில், அவரது பணிகளை நினைவில் கொண்டு பயணிப்போம்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via