தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீச வாய்ப்பு.

by Editor / 29-08-2023 09:39:22am
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீச வாய்ப்பு.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

 

Tags : வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று

Share via