தமிழக விஞ்ஞானி நிகர் ஷாஜிக்கு முதல்வர் பாராட்டு

by Staff / 03-09-2023 04:45:29pm
தமிழக விஞ்ஞானி நிகர் ஷாஜிக்கு முதல்வர் பாராட்டு

ஆதித்யா L1 திட்ட இயக்குநராக சாதித்துள்ள தமிழப் பெண் நிகர் ஷாஜிக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டு ட்விட்டர் பதிவில், சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான #AdityaL1 திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி #NigarShaji அவர்களை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன். தமிழ்நாட்டின் மாநில அரசுப் பள்ளி, கல்லூரி, பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் திறத்திலும் தரத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதைத் தொடர்ந்து #Chandrayaan முதல் #Aditya வரை நம் சாதனைத் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர்'' என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via