டிடிவி. தினகரனுக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் கருத்து

by Staff / 05-09-2023 10:55:15am
டிடிவி. தினகரனுக்கு எதிரான வழக்கில் நீதிபதிகள் கருத்து

1998-ம்ஆண்டு டிடிவி. தினகரனுக்கு விதிக்கப்பட்ட ரூ. 31 கோடி அபராதத்தை, பின்னர் அமலாக்கத் துறை மேல்முறையீட்டு ஆணையம் ரூ. 28 கோடியாக குறைத்தது.இந்த அபராதத்தை அவர் இதுவரையிலும் செலுத்தவில்லை. இதனால் அவரை திவாலானவர் என அறிவிக்கக் கோரும் வகையில் அமலாக்கத்துறை நோட்டீஸ் பிறப்பித்தது. அதை எதிர்த்து தினகரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த2003-ம் ஆண்டு, இது உரிமையியல் நீதிமன்றத்தால் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினை எனக் கூறி தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், ஆர். கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
நாட்டின் குடியரசுத் தலைவரானாலும், பிரதமரானாலும் தவறுசெய்தால் சட்டரீதியாக எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். என்னை ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறிவிட முடியுமா? அமலாக்கத்துறை விதித்துள்ள அபராதத்தை செலுத்தியிருந்தால் உங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு இருக்காதே. அபராதத்தை செலுத்த நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? என்றனர். பின்னர் நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்துள்ளனர்

 

Tags :

Share via