11 மாத குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை

by Staff / 07-09-2023 12:44:48pm
11 மாத குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை

தீவிர நோய் எதிர்ப்பாற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 11 மாதக் குழந்தைக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வெற்றிகரமாக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டது.இது தொடர்பாக மருத்துவமனை டீன் தேரணிராஜன் கூறியதாவது: திருச்சியைச் சேர்ந்த 11 மாதக் குழந்தை ஒன்று தீவிர நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு (எஸ்சிஐடி) நோயால் பாதிக்கப்பட்டிருந்தது. இத்தகைய பிரச்சினைக்கு உள்ளான குழந்தைகளுக்கு உரிய சிகிச்சைகளை அளிக்காவிடில் பிறந்த ஓராண்டுக்குள் உயிரிழக்கும்.அதைக் கருத்தில் கொண்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தைக்கு உயர் சிகிச்சையளிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மட்டுமே அக்குழந்தையைக் காப்பாற்ற ஒரே வழியாக இருந்தது. வெறும் 11 மாதங்கள் நிறைவடைந்த அக்குழந்தைக்கு அதற்கு முன்னதாக தீவிர காசநோய் பாதிப்பு ஏற்பட்டு, எழும்பூர் அரசு குழந்தைகள் நலமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.இதையடுத்து மருத்துவமனையின் குழந்தைகள் குருதிசார் சிகிச்சை துறைத் தலைவர் ரவிச்சந்திரன், உதவிப் பேராசிரியர் அருணா ராஜேந்திரன், குருதிசார் துறைத் தலைவர் ஹரிஹரன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் போர்ட்-அ-கேத்ஸ்டெம் முறையில் ஸ்டெம் செல்களை மாற்றி அக்குழந்தைக்கு 2 மாதங்கள் சிகிச்சை அளித்தனர்

 

Tags :

Share via