அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

by Staff / 10-09-2023 12:39:40pm
அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

டெல்லியில் நேற்று ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு தொடங்கியது. இன்று இரண்டாவது நாளாக மாநாடு நடக்கிறது. இதில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சவுதி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டின் ஒருபகுதியாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அளித்த இரவு விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கலந்துகொண்டார். இந்த விருந்து நிகழ்வுக்கு இடையே அமெரிக்க அதிபர் ஜோ பிடனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது அருகில் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் மோடி, ஜார்க்கண்ட் முதல்வர் உள்ளிட்டோர் இருந்தனர்.

 

Tags :

Share via