நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்

by Staff / 02-11-2023 11:46:38am
நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்

சென்னை வளசரவாக்கத்திலுள்ள வீட்டில் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ஜூனியர் பாலையா (70) காலமானார். கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம், சாட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஜூனியர் பாலையா நடித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த நடிகர் ஜூனியர் பாலையா (70) இன்று காலை மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் காலமானார். அவரது உடல் வளசாரவாக்கத்தில் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள், நண்பர்கள், திரையுலகத்தினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். மேலும், அவரது உடல் நாளை தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via