அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

by Staff / 19-11-2023 04:20:54pm
அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

நடப்பு கல்வி ஆண்டில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான, அரையாண்டு தேர்வுக் கால அட்டவணை பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், உத்தேச கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு டிசம்பர் 11ம் தேதி தொடங்கி, 21ம் தேதி தேர்வுகள் முடிவடைகின்றன. அதேபோல் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு டிசம்பர் 7ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகின்றன.

 

Tags :

Share via