சட்டப்பேரவைச் செயலாளர் நீட்டிப்பு : ராமதாஸ் கண்டனம்

by Staff / 01-12-2023 03:10:37pm
சட்டப்பேரவைச் செயலாளர் நீட்டிப்பு : ராமதாஸ் கண்டனம்

தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் கே.சீனிவாசன் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : சட்டபேரவைச் செயலாளரின் பதவி காலத்தை அரசு நீடித்து உத்தரவிட்டுள்ளது. 'பதவிக் காலம் முடிவடைந்த ஒருவருக்கு பணி நீட்டிப்பு செய்வதால், அவருக்கு அடுத்த நிலையில் உள்ளவர்களின் பதவி உயர்வை அது பாதிக்கிறது. அதனால், அந்த உத்தரவை ரத்து செய்துவிட்டு, உடனடியாக தகுதியும், திறமையும் கொண்ட ஒருவரை நியமிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via