விமான சேவை மீண்டும் தொடங்கியது

by Staff / 05-12-2023 12:02:21pm
விமான சேவை மீண்டும் தொடங்கியது

மிக்ஜாம் புயல் தாக்கத்தால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை மீண்டும் தொடங்கியது. நேற்று விமான நிலையம் முழுவதுமாக மூடப்பட்டது. இந்தநிலையில், இன்று ஓடுபாதையில் மழை, வெள்ளம் காரணமாக குறைந்த அளவு விமானங்களே இயக்கப்படுகின்றன. அதன்படி, இன்று மட்டும் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 89 விமானங்கள், வர வேண்டிய 88 விமானங்கள் என மொத்தம் 177 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று விமான நிலையத்தில், அதிகளவு காற்று வீசிய குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via