120 குடும்பங்களுக்கு உதவிய நடிகர் பாலா

by Staff / 09-12-2023 04:13:57pm
120 குடும்பங்களுக்கு உதவிய நடிகர் பாலா

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிக்கரணை மற்றும் துரைப்பாக்கம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரூ.3 லட்சம் செலவில் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார் நடிகர் பாலா. பள்ளிக்கரணையில் உள்ள 120 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியும், துரைப்பாக்கம் பல்லவன் நகரில் உள்ள மக்களுக்கு நைட்டி, லுங்கி உள்ளிட்ட ஆடை மற்றும் உதவித் தொகையை வழங்கியுள்ளார். ஏற்கனவே 2 நாட்களுக்கு முன்பு, ரூ.2 லட்சம் செலவில் பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் பகுதியில் உள்ள 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணமாக வழங்கினார் நடிகர் பாலா.

 

Tags :

Share via