கனிமொழி உள்ளிட்ட 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

by Staff / 14-12-2023 04:01:51pm
கனிமொழி உள்ளிட்ட 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்

திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட மேலும் 9 எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக விவாதிக்க அனுமதிக்ககோரி அமளியில் ஈடுபட்ட நிலையில், மாணிக்கம் தாகூர், பி.ஆர். நடராஜன், சுப்பராயன், எஸ்.ஆர்.பார்த்திபன், சு.வெங்கடேசன் உட்பட 9 எம்.பி.க்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, ஜோதிமணி உட்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் 5 பேர் மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன், ஹிபி இடன், டீன் குரியகோஸ் ஆகிய எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via