திரை உலகை சார்ந்தவர்கள்நடத்தும் கலைஞர் 100 - நூற்றாண்டு விழா இடமாற்றம்

by Admin / 26-12-2023 01:41:54pm
 திரை உலகை சார்ந்தவர்கள்நடத்தும் கலைஞர் 100 - நூற்றாண்டு விழா இடமாற்றம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதலமைச்சர் திரைப்பட கதை வசனத்தாகவும் திகழ்ந்தவர் கலைஞர் மு. கருணாநிதி. அவர் பிறந்து நூறு ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த ஆண்டு அவருடைய நூற்றாண்டு விழாவை கொண்டாடிக் கொண்டு வரும் நிலையில் ,திரைப்படத் துறையில் அவருடைய பங்களிப்பு வியக்கத்தக்க முறையில் இருந்ததை கருத்தில் கொண்டு திரை உலகை சார்ந்தவர்கள் கலைஞர் 100 என்கிற நிகழ்ச்சியை நடத்த உள்ளனர்.இந்நிகழ்ச்சியை முன்பு திட்டமிட்ட இடத்தில் அதாவது சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடத்துவதாக இருந்தது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பதை அடிப்படையாகக் கொண்டு தற்பொழுது சென்னை ரேஸ் கோர்ஸ் திறந்த வெளி மைதானத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாட இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

 திரை உலகை சார்ந்தவர்கள்நடத்தும் கலைஞர் 100 - நூற்றாண்டு விழா இடமாற்றம்
 

Tags :

Share via