தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முழு அரசு மரியாதை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Editor / 28-12-2023 10:31:49am
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முழு அரசு மரியாதை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு:அன்பிற்கினிய நண்பர் - தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும்.திரு. விஜயகாந்த் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்” என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தெரிவித்துள்ளார். 

 

Tags : தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முழு அரசு மரியாதை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Share via