நாமக்கல் தொகுதி கொ.ம.தே.க. கட்சிக்கு கிடைக்குமா..

by Staff / 10-02-2024 04:16:18pm
நாமக்கல் தொகுதி கொ.ம.தே.க. கட்சிக்கு கிடைக்குமா..

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இந்த நிலையில், வரும் 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு திமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் ஈ.ஆர்.ஈஸ்வரனின் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. அன்றைய தினமே ஐயூஎம்எல், விசிக உள்ளிட்ட கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த முறை நாமக்கல் தொகுதி கொ.ம.தே.க. கட்சிக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via