ராணுவ ஹெலிகாப்டர் நீர் தேக்கத்தில் விழுந்தது

by Editor / 04-08-2021 09:43:38am
ராணுவ ஹெலிகாப்டர் நீர் தேக்கத்தில் விழுந்தது

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் அருகே நீர்த்தேக்கத்தில் ராணுவ ஹெலிகாப்டர்  விழுந்து மூழ்கியது

254 ஏஏ ரக ராணுவ ஹெலிகாப்டர் வானில் எழுந்த சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது .அதன் காரணமாக அருகில் இருந்த ரஞ்சித் சாகர் நீர்த்தேக்கத்தில் தலைகுப்புற ராணுவ ஹெலிகாப்டர் விழுந்தது தண்ணீரில் விழுந்த ஹெலிகாப்டர் உடனடியாக நீரில் மூழ்கி விட்டது. செவ்வாய்க்கிழமை காலை 10.20 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டது.

ஹெலிகாப்டர் நீரில் விழுந்து மூழ்கிய இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையின் படகுகள் விரைந்து அனுப்பப்பட்டன.ஹெலிகாப்டரை இயக்கிய விமானியையும் ஹெலிகாப்டரையும் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via