நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பது இல்லை ..வேல்முருகன்.

by Editor / 17-02-2024 11:50:56pm
 நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பது இல்லை ..வேல்முருகன்.

 

தென்காசி மாவட்டம் குற்றாலம் தனியார் விடுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆய்வு பணி மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கான பொறுப்பாளர்களுக்கு பொறுப்பு வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழகம் பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஒரு தொகுதிகளில் போட்டியிட தமிழக வாழ்வுரிமைக் கட்சி முடிவு செய்துள்ளது. கூட்டணிக்கு தலைமை வகிக்கின்ற திமுக அதனைக் கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி இடம் பெறவில்லை எனவும், தமிழக கூட்டணி மட்டுமே அங்கம் வகிப்பதாக தெரிவித்தார். அந்த வகையில் தேசிய காங்கிரஸ் கட்சியுடன் உள்ள வருத்தத்தின் காரணமாக கடந்த தேர்தல்களை போன்று வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பது இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழகத்தில் நிதி நெருக்கடி இருப்பது உண்மை எனவும், நாளை தானே முதல்வர் பொறுப்பிற்கு வந்தாலும் கடன் வாங்கி தான் அரசு நிர்வாகத்தை நடத்த வேண்டிய சூழலில் உள்ளது. அந்த வகையில் திமுக தேர்தல் வாக்குறுதிகளை சில நிறைவற்றினாலும், நிதி நெருக்கடி காரணமாக சில நிறைவேற்றப்படவில்லை என கூறினார் 

தொடர்ந்து பேசியவர் அவர்,
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிட்டால் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாது. அதே சமயம் பாரதிய ஜனதா கட்சி கடந்த ஆண்டுகளை விட அதிக அளவு மக்களிடம் சென்றுள்ளது. குறிப்பாக கிராம மக்களிடம் பாரதிய ஜனதா கட்சி வளர்ச்சி என்பது அதிகரித்து உள்ளதாக தெரிவித்தார்.

 

Tags :  நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பது இல்லை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் நிறுவன தலைவர் வேல்முருகன்

Share via