காங்கிரஸ் பிரமுகரை கடத்திச் சென்று பாஜகவில் சேர டார்ச்சர்

by Staff / 05-04-2024 12:38:32pm
காங்கிரஸ் பிரமுகரை கடத்திச் சென்று பாஜகவில் சேர டார்ச்சர்

கர்நாடகா மாநிலதில் நந்தினி லே -அவுட் பகுதியில் காங்கிரஸ் கட்சித் தொண்டர் சாமுவேல் என்பவரை முன்னாள் அமைச்சரும் பாஜக எம்எல்ஏ-வுமான எம்.முனிரத்னா ஆதரவாளர்கள் காரில் கடத்திச் சென்று இரண்டு நாட்களாக அடைத்து வைத்து, அவரை பாஜகவில் இணையுமாறு வற்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நந்தினி லே-அவுட் காவல் நிலையத்தில் சாமுவேல் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார், எம்எல்ஏ முனிரத்னா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது கடத்தல் வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via