தமிழ்நாட்டிற்கு வரும் டெஸ்லா கார் தொழிற்சாலை? அமைச்சர் தகவல்

by Staff / 12-04-2024 03:29:12pm
தமிழ்நாட்டிற்கு வரும் டெஸ்லா கார் தொழிற்சாலை? அமைச்சர் தகவல்

எலான் மஸ்கின் ‘டெஸ்லா’ எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு ஆலையை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்கு அரசு தீவிர முயற்சி எடுத்து வருவதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். மின்சார கார் ஆலை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக எலான் மஸ்க் விரைவில் இந்தியா வர இருக்கிறார். தொழிற்சாலை அமைப்பதற்கு தமிழ்நாட்டில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளும், கார் தயாரிப்புக்கு இசைவான கொள்கைகளும் வகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via