இணைய சேவை மையங்கள் வழியே காப்பீடு

by Editor / 21-08-2021 10:49:28am
இணைய சேவை மையங்கள் வழியே காப்பீடு

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மை துறைக்கு என தனியாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை அரசு உறுதி செய்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இணைய சேவை மையங்களின் வழியே பயிர்களுக்கான காப்பீட்டை மேற்கொள்ளலாம் என வேளாண்மை துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், கடன் பெறக்கூடிய விவசாயிகள் அனைவரும் பயிர்களுக்கான காப்பீட்டை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மேற்கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களில் வழியே காப்பீடு செய்யலாம் என்று வேளாண்மைத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.அதன்படி தமிழகத்தில் பயிர் காப்பீட்டு திட்டம் 2300 கோடியில் 32 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என்று வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.

 

Tags :

Share via