அங்கன்வாடி மையங்களில் வரும் 1ந் தேதி முதல் மதிய உணவு- தமிழக அரசு உத்தரவு

by Admin / 25-08-2021 01:57:49pm
அங்கன்வாடி மையங்களில் வரும் 1ந் தேதி முதல் மதிய உணவு- தமிழக அரசு உத்தரவு

 

அங்கன்வாடி ஊழியர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் மையத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

அங்கன்வாடி மையங்கள் வரும் 1ந் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:
 
* தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களில் வரும் 1ந் தேதி முதல் சூடான மதிய உணவு வழங்க வேண்டும்.

* 2 முதல் 6 வயது குழந்தைகளுக்கு பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை மதிய உணவு வழங்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி

* அங்கன்வாடி ஊழியர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

* அங்கன்வாடி ஊழியர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும்.

* வளாகங்கள், சமையலறை உள்ளிட்டவற்றை தூய்மைப்படுத்திய பின் பயன்படுத்த வேண்டும்.

* அங்கன்வாடி மையங்களுக்கு வரும் 2 முதல் 6 வயது குழந்தைகள் முககவசம் அணிவது கட்டாயமில்லை.

* அங்கன்வாடி ஊழியர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் மையத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

* பயனாளிகள் முட்டைகளை வீட்டிற்கு எடுத்துச்செல்ல அனுமதிக்கக்கூடாது

* ஊழியர்கள் விரல் நகங்களில் நகப்பூச்சு மற்றும் செயற்கை நகங்களை பயன்படுத்தக்கூடாது.

* மூக்கு சொறிதல், தலை கோதுதல், கண்கள், காது, வாயினை தேய்த்தல், எச்சில் துப்புவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via