காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு போதிய அனுபவம்இல்லை.-- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
இன்று சென்னை கிண்டியில் தீரன் சின்னமலை உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து பின்னர் செய்தியாளர் சந்திப்பின் பொழுது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு போதிய அனுபவம்- வரலாற்று அறிவும் இல்லாததால் சட்டபூர்வமாக பெற்ற உரிமைகளை காப்பாற்ற தவறிவிட்டது என்று சாடினார். தமிழக வெற்றி கழகம் 2 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்ததால் மிக நீண்ட கால சிக்கலான காவிரி நதிநீர் விவகாரம் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளவில்லை என்றும் அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளின் ஆட்சி காலத்தில் காவிரி மேகதாது போன்ற முக்கிய பிரச்சனைகள் எழும் போதெல்லாம் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து ஒருமித்த கருத்து எடுக்கப்படும் என்றும் ஆனால் தமிழக வெற்றிக்கலக அரசு இதை செய்ய தவறிவிட்டதாகவும் அதிமுக ஆட்சி காலத்தில் உச்ச நீதிமன்ற மூலம் சட்டபூர்வமாக பெறப்பட்ட நிரந்தர தீர்வையும் தமிழகத்தின் நீர் உரிமையும் கூட இந்த அரசால் காப்பாற்ற முடியவில்லை என்றும் கர்நாடகாவின் மேகதாது அணைக்கட்டும் முயற்சிகளுக்கு எதிராக உடனடியாக அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் தெரிவித்ததோடு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுகளை மீறி தண்ணீரை திறந்து விட மறுக்கும் கர்நாடகா அரசுக்கு எதிராக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெல்டா மாவட்ட விவசாய பிரதிநிதிகளை அழைத்து ஆலோசிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
Tags :



















